திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 226
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – ஈகை
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.
மு. வரதராசன் உரை : வறியவரின் கடும்பசியைத் தீர்க்க வேண்டும் அதுவே பொருள் பெற்ற ஒருவன் அப் பொருளைத் தனக்குப் பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.
சாலமன் பாப்பையா உரை : ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே.
கலைஞர் உரை : பட்டினி எனச் சொல்லி வந்தவரின் பசியைத் தீர்ப்பது வீண் போகாது அதுவே, தான் தேடிய பொருளைப் பிற்காலத்தில் உதவுவதற்கு ஏற்பச் சேமித்து வைக்கக்கூடிய கருவூலமாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Eekai ( Giving )
Tanglish :
Atraar Azhipasi Theerththal Aqdhoruvan
Petraan Porulvaip Puzhi
Couplet :
Let man relieve the wasting hunger men endure;For treasure gained thus finds he treasure-house secure
Translation :
Drive from the poor their gnawing pains If room you seek to store your gains
Explanation :
The removal of the killing hunger of the poor is the place for one to lay up his wealth