திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 144
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – பிறனில் விழையாமை
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
மு. வரதராசன் உரை : தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?
சாலமன் பாப்பையா உரை : அடுத்தவன் மனைவியை விரும்பித் தன் பிழையைச் சிறிதும் எணணாமல் அவ்வீட்டில் நுழைபவன் எத்தனைப் பெருமை உடையவனாய் இருந்துதான் என்ன?
கலைஞர் உரை : பிழை புரிகிறோம் என்பதைத் தினையளவுகூடச் சிந்தித்துப் பாராமல், பிறன் மனைவியிடம் விருப்பம் கொள்வது, எத்துணைப் பெருமையுடையவரையும் மதிப்பிழக்கச் செய்துவிடும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Piranil Vizhaiyaamai ( Not coveting another”s Wife )
Tanglish :
Enaiththunaiyar Aayinum Ennaam Thinaiththunaiyum
Theraan Piranil Pukal
Couplet :
How great soe’er they be, what gain have they of life,Who, not a whit reflecting, seek a neighbour’s wife
Translation :
Their boasted greatness means nothing When to another’s wife they cling
Explanation :
However great one may be, what does it avail if, without at all considering his guilt, he goes unto the wife of another ?