திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 205
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – தீவினையச்சம்
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து.
மு. வரதராசன் உரை : யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
சாலமன் பாப்பையா உரை : தன் ஏழ்மையைப் போக்கப் பிறர்க்குத் தீமை செய்யாதே, செய்தால் மேலும் ஏழை ஆவாய்.
கலைஞர் உரை : வறுமையின் காரணமாக ஒருவன் தீய செயல்களில் ஈடுபடக்கூடாது; அப்படி ஈடுபட்டால் மீண்டும் அவன் வறுமையிலேயே வாட வேண்டியிருக்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Theevinaiyachcham ( Dread of Evil Deeds )
Tanglish :
Ilan Endru Theeyavai Seyyarka
Seyyin Ilanaakum Matrum Peyarththu
Couplet :
Make not thy poverty a plea for ill;Thy evil deeds will make thee poorer still
Translation :
Who makes poverty plea for ill Shall reduce himself poorer still
Explanation :
Commit not evil, saying, “I am poor”: if you do, you will become poorer still