திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 99
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – இனியவை கூறல்
இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது?
மு. வரதராசன் உரை : இனிய சொற்கள் இன்பம் பயத்தலைக் காண்கின்றவன், அவற்றிற்கு மாறான வன்சொற்களை வழங்குவது என்ன பயன் கருதியோ?
சாலமன் பாப்பையா உரை : பிறர் சொல்லும் இனிய சொற்கள், இன்பம் தருவதை உணர்ந்தவன், பிறர்க்கும் தனக்கும் துன்பம் தரும் கடும் சொற்களைப் பேசுவது என்ன பயன் கருதியோ?
கலைஞர் உரை : இனிய சொற்கள் இன்பத்தை வழங்கும் என்பதை உணர்ந்தவர் அதற்கு மாறாக எதற்காகக் கடுஞ் சொற்களைப் பயன்படுத்த வேண்டும்?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Iniyavaikooral ( The Utterance of Pleasant Words )
Tanglish :
Insol Inidheendral Kaanpaan Evankolo
Vansol Vazhangu Vadhu?
Couplet :
Who sees the pleasure kindly speech affords,Why makes he use of harsh, repellant words
Translation :
Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare?
Explanation :
Why does he use harsh words, who sees the pleasure which sweet speech yields ?