திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 374
- பால் – அறத்துப்பால்
- இயல் – ஊழியல்
- அதிகாரம் – ஊழ்
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு.
மு. வரதராசன் உரை : உலகத்தின் இயற்க்கை ஊழின் காரணமாக இரு வேறு வகைப்படும், செல்வம் உடையவராதலும் வேறு அறிவு உடையவராதலும் வேறு.
சாலமன் பாப்பையா உரை : உலகின் இயல்பு இருவகைப்பட்டது; செல்வரை ஆக்கும் விதியும், அறிஞரை ஆக்கும் விதியும் வேறு வேறாம்.
கலைஞர் உரை : உலகின் இயற்கை நிலை இரு வேறுபட்டதாகும் ஒருவர் செல்வமுடையவராகவும், ஒருவர் அறிவுடையவராகவும் இருப்பதே அந்த வேறுபாடாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Oozhiyal ( Fate )
- Adikaram : Oozh ( Fate )
Tanglish :
Iruveru Ulakaththu Iyarkai Thiruveru
Thelliya Raadhalum Veru
Couplet :
Two fold the fashion of the world: some live in fortune’s light;While other some have souls in wisdom’s radiance bright
Translation :
Two natures in the world obtain Some wealth and others wisdom gain
Explanation :
There are (through fate) two different natures in the world, hence the difference (observable in men) in (their acquisition of) wealth, and in their attainment of knowledge