திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1171
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – கண் விதுப்பழிதல்
கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது.
மு. வரதராசன் உரை : தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?
சாலமன் பாப்பையா உரை : தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?
கலைஞர் உரை : கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Kanvidhuppazhidhal ( Eyes consumed with Grief )
Tanglish :
Kandhaam Kaluzhva Thevankolo Thantaanoi
Thaamkaatta Yaamkan Tadhu
Couplet :
They showed me him, and then my endless painI saw: why then should weeping eyes complain
Translation :
The eye pointed him to me; why then They weep with malady and pine?
Explanation :
As this incurable malady has been caused by my eyes which showed (him) to me, why should they now weep for (him)