திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 840
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – பேதைமை
கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்.
மு. வரதராசன் உரை : சான்றோரின் கூட்டத்தில் பேதை புகுதல், ஒருவன் தூய்மையில்லாதவற்றை மிதித்துக் கழுவாதக் காலைப் படுக்கையில் வைத்தாற் போன்றது.
சாலமன் பாப்பையா உரை : சான்றோர் கூடியிருக்கும் இடத்துள் அறிவற்றவன் நுழைவது, கழுவாத காலைப் படுக்கைமேல் வைத்தது போலாகும்.
கலைஞர் உரை : அறிஞர்கள் கூடியுள்ள மன்றத்தில் ஒரு முட்டாள் நுழைவது என்பது, அசுத்தத்தை மிதித்த காலைக் கழுவாமலே படுக்கையில் வைப்பதைப் போன்றது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Pedhaimai ( Folly )
Tanglish :
Kazhaaakkaal Palliyul Vaiththatraal Saandror
Kuzhaaaththup Pedhai Pukal
Couplet :
Like him who seeks his couch with unwashed feet,Is fool whose foot intrudes where wise men meet
Translation :
Entrance of fools where Savants meet Looks like couch trod by unclean feet
Explanation :
The appearance of a fool in an assembly of the learned is like placing (one’s) unwashed feet on a bed