திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 418
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – கேள்வி
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.
மு. வரதராசன் உரை : கேள்வியறிவால் துளைக்கப் படாத செவிகள், ( இயற்கையான துளைகள் கொண்டு ஓசையைக்) கேட்டறிந்தாலும் கேளாத செவிட்டுத் தன்மை உடையனவே.
சாலமன் பாப்பையா உரை : கேள்வி ஞானத்தால் துளைக்கப்படாத செவிகள் ஓசைகளைக் கேட்டாலும் அவை செவிட்டுத் தன்மையவே.
கலைஞர் உரை : இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kelvi ( Hearing )
Tanglish :
Ketpinung Kelaath Thakaiyave Kelviyaal
Thotkap Pataadha Sevi
Couplet :
Where teaching hath not oped the learner’s ear,The man may listen, but he scarce can hear
Translation :
That ear though hearing is dulled Which is not by wisdom drilled
Explanation :
The ear which has not been bored by instruction, although it hears, is deaf