திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 3
- பால் – அறத்துப்பால்
- இயல் – பாயிரவியல்
- அதிகாரம் – கடவுள் வாழ்த்து
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மு. வரதராசன் உரை : அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்
சாலமன் பாப்பையா உரை : மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர்
கலைஞர் உரை : மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Paayiraviyal ( Prologue )
- Adikaram : Katavul Vaazhththu ( The Praise of God )
Tanglish :
Malarmisai Ekinaan Maanati Serndhaar
Nilamisai Neetuvaazh Vaar
Couplet :
His feet, ‘Who o’er the full-blown flower hath past,’ who gainIn bliss long time shall dwell above this earthly plain
Translation :
Long they live on earth who gain The feet of God in florid brain
Explanation :
They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds