Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk Kondraakum Aakkang Katai | நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் | Kural No - 328 | Thirukkural Meaning & Definition in Tamil and English

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை. | குறள் எண் – 328

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 328
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – துறவறவியல்
  • அதிகாரம் – கொல்லாமை

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்

கொன்றாகும் ஆக்கங் கடை.

மு. வரதராசன் உரை : கொலையால் நன்மையாக விளையும் ஆக்கம் பெரிதாக இருந்தாலும், சான்றோர்க்குக் கொலையால் வரும் ஆக்கம் மிக இழிவானதாகும்.

சாலமன் பாப்பையா உரை : வேள்விகளில் கொலை செய்வதால் நன்மை வரும், செல்வம் பெருகும் என்றாலும், பிற உயிரைக் கொல்வதால் வரும் செல்வத்தைச் சான்றோர் இழிவானதாகவே எண்ணுவர்.

கலைஞர் உரை : பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
  • Adikaram : Kollaamai ( Not killing )

Tanglish :

Nandraakum Aakkam Peridheninum Saandrorkkuk

Kondraakum Aakkang Katai

Couplet :

Though great the gain of good should seem, the wiseWill any gain by staughter won despise

Translation :

The gain of slaughter is a vice Though deemed good in sacrifice

Explanation :

The advantage which might flow from destroying life in sacrifice, is dishonourable to the wise (who renounced the world), even although it should be said to be productive of great good

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *