திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1199
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – தனிப்படர் மிகுதி
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு.
மு. வரதராசன் உரை : யான் விரும்பிய காதலர் மீண்டு வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் செவிக்கு இன்பமாக இருக்கின்றது.
சாலமன் பாப்பையா உரை : நான் காதலிக்கும் என் கணவர் என்மீது அன்பற்றவர்தாம் என்றாலும், அவரிடம் இருந்து வரும் எந்தச் சொல்லும் என் செவிக்கு இனிமையானதே.
கலைஞர் உரை : என் அன்புக்குரியவர் என்னிடம் அன்பு காட்டாதவராகப் பிரிந்து இருப்பினும், அவரைப் பற்றிய புகழ் உரை என் செவிக்குச் செந்தேனாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Thanippatarmikudhi ( The Solitary Anguish )
Tanglish :
Nasaiiyaar Nalkaar Eninum Avarmaattu
Isaiyum Iniya Sevikku
Couplet :
Though he my heart desires no grace accords to me,Yet every accent of his voice is melody
Translation :
The lover accords not my desires And yet his words sweeten my ears
Explanation :
Though my beloved bestows no love on one, still are his words sweet to my ears