திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1196
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – தனிப்படர் மிகுதி
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது.
மு. வரதராசன் உரை : காதல் ஒரு பக்கமாக இருத்தல் துன்பமானது; காவடியின் பாரம் போல் இருபக்கமாகவும் ஒத்திருப்பது இன்பமானதாகும்.
சாலமன் பாப்பையா உரை : ஆண், பெண் என்னும் இரு பக்கத்தில் ஒரு பக்கம் மட்டுமே காதல் இருந்தால் அது கொடுமை காவடியின் பாரத்தைப் போல இருபக்கமும் இருந்தால்தான் இனிது.
கலைஞர் உரை : காவடித் தண்டின் இரண்டு பக்கங்களும் ஒரே அளவு கனமாக இருப்பதுபோல், காதலும் ஆண், பெண் எனும் இருவரிடத்திலும் மலர வேண்டும்; ஒரு பக்கம் மட்டுமே ஏற்படும் காதலால் பயனுமில்லை; துயரமும் உருவாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Thanippatarmikudhi ( The Solitary Anguish )
Tanglish :
Orudhalaiyaan Innaadhu Kaamamkaap Pola
Irudhalai Yaanum Inidhu
Couplet :
Love on one side is bad; like balanced loadBy porter borne, love on both sides is good
Translation :
One sided pains; love in both souls Poises well like shoulder poles
Explanation :
Lust, like the weight of the KAVADI, pains if it lies in one end only but pleases if it is in both