திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 398
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – கல்வி
ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
மு. வரதராசன் உரை : ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது.
சாலமன் பாப்பையா உரை : ஒருவன் ஒரு பிறவியில் கற்ற கல்வி, அவனுக்கு ஏழு பிறப்பிலும் – எழும் பிறவிதோறும் கூடவே சென்று உதவும்.
கலைஞர் உரை : ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kalvi ( Learning )
Tanglish :
Orumaikkan Thaan Katra Kalvi
Oruvarku Ezhumaiyum Emaap Putaiththu
Couplet :
The man who store of learning gains,In one, through seven worlds, bliss attains
Translation :
The joy of learning in one birth Exalts man upto his seventh
Explanation :
The learning, which a man has acquired in one birth, will yield him pleasure during seven births