திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1234
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – உறுப்புநலன் அழிதல்
பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்.
மு. வரதராசன் உரை : துணைவர் விட்டு நீங்கியதால் பழைய அழகு கெட்டு வாடிய தோள்கள், பருத்த தன்மை கெட்டு மெலிந்து வளையல்களும் கழலச் செய்கின்றன.
சாலமன் பாப்பையா உரை : அவர் என்னைப் பிரிந்ததால் பழைய இயற்கை அழகை இழந்த என் தோள்கள், இப்போது வளையல்களும் கழலும்படி மெலிந்திருக்கின்றன.
கலைஞர் உரை : பருத்திருந்த பருவத் தோள்கள் பழைய எழில் குலைந்து, பசும்பொன் வளையல்களும் கழன்று விழுகின்றன காதலனைப் பிரிந்து வாடுவதன் காரணமாக
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Uruppunalanazhidhal ( Wasting Away )
Tanglish :
Panaineengip Paindhoti Sorum Thunaineengith
Tholkavin Vaatiya Thol
Couplet :
When lover went, then faded all their wonted charms,And armlets’ golden round slips off from these poor wasted arms
Translation :
Bracelets slip off the arms that have Lost old beauty for He took leave
Explanation :
In the absence of your consort, your shoulders having lost their former beauty and fulness, your bracelets of pure gold have become loose