திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1189
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – பசப்புறு பருவரல்
பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின்.
மு. வரதராசன் உரை : பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையுடையவர் ஆவார் என்றால், என்னுடைய மேனி உள்ளபடி பசலை நிறம் அடைவதாக.
சாலமன் பாப்பையா உரை : இந்தப் பிரிவிற்கு நான் சம்மதிக்கும்படி செய்து பிரிந்தவர்தாம் நல்லவர் என்றால், என் மேனி மேலும் பசலை அடைந்து விட்டுப் போகட்டும்!
கலைஞர் உரை : பிரிந்து சென்றிட என்னை ஒப்புக் கொள்ளுமாறு செய்த காதலர் நலமாக இருப்பார் என்றால் என்னுடல் பசலை படர்ந்தே விளங்கிடுமாக!
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Pasapparuparuvaral ( The Pallid Hue )
Tanglish :
Pasakkaman Pattaangen Meni Nayappiththaar
Nannilaiyar Aavar Enin
Couplet :
Well let my frame, as now, be sicklied o’er with pain,If he who won my heart’s consent, in good estate remain
Translation :
Let all my body become pale If he who took my leave fares well
Explanation :
If he is clear of guilt who has conciliated me (to his departure) let my body suffer its due and turn sallow