திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 438
- பால் – பொருட்பால்
- இயல் – அரசியல்
- அதிகாரம் – குற்றங்கடிதல்
பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று.
மு. வரதராசன் உரை : பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.
சாலமன் பாப்பையா உரை : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.
கலைஞர் உரை : எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Arasiyal ( Royalty )
- Adikaram : Kutrangatidhal ( The Correction of Faults )
Tanglish :
Patrullam Ennum Ivaranmai Etrullum
Ennap Patuvadhon Randru
Couplet :
The greed of soul that avarice men call,When faults are summed, is worst of all
Translation :
The gripping greed of miser’s heart Is more than fault the worst apart
Explanation :
Griping avarice is not to be reckoned as one among other faults; (it stands alone – greater than all)