திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 816
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – தீ நட்பு
பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்.
மு. வரதராசன் உரை : அறிவில்லாதவனுடைய மிகப் பொருந்திய நட்பை விட அறிவுடையவரின் நட்பில்லாத தன்மை கோடி மடங்கு நன்மை தருவதாகும்.
சாலமன் பாப்பையா உரை : அறிவற்றவனின் மிக நெருக்கமான நட்பைக் காட்டிலும் அறிவுடையார்களின் பகை, கோடி நன்மையாம்.
கலைஞர் உரை : அறிவில்லாதவனிடம் நெருங்கிய நட்புக் கொண்டிருப்பதை விட, அறிவுடைய ஒருவரிடம் பகை கொண்டிருப்பது கோடி மடங்கு மேலானதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Thee Natpu ( Evil Friendship )
Tanglish :
Pedhai Perungezheei Natpin Arivutaiyaar
Edhinmai Koti Urum
Couplet :
Better ten million times incur the wise man’s hate,Than form with foolish men a friendship intimate
Translation :
Million times the wise man’s hate Is better than a fool intimate
Explanation :
The hatred of the wise is ten-million times more profitable than the excessive intimacy of the fool