திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 907
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – பெண்வழிச் சேறல்
பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.
மு. வரதராசன் உரை : மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.
சாலமன் பாப்பையா உரை : மனைவி ஏவ, அதையே செய்து நடக்கும் ஆண்மையைக் காட்டிலும், வெட்கப்படுதலை உடைய பெண் தன்மையே சிறந்தது.
கலைஞர் உரை : ஒரு பெண்ணின் காலைச் சுற்றிக் கொண்டு கிடைக்கும் ஒருவனின் ஆண்மையைக் காட்டிலும், மான உணர்வுள்ள ஒருத்தியின் பெண்மையே பெருமைக்குரியதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Penvazhichcheral ( Being led by Women )
Tanglish :
Penneval Seydhozhukum Aanmaiyin Naanutaip
Penne Perumai Utaiththu
Couplet :
The dignity of modest womanhood excelsHis manliness, obedient to a woman’s law who dwells
Translation :
Esteemed more is women bashful Than man servile unto her will
Explanation :
Even shame faced womanhood is more to be esteemed than the shameless manhood that performs