திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 1259
- பால் – காமத்துப்பால்
- இயல் – கற்பியல்
- அதிகாரம் – நிறையழிதல்
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம்
கலத்தல் உறுவது கண்டு.
மு. வரதராசன் உரை : ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
சாலமன் பாப்பையா உரை : அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
கலைஞர் உரை : ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Kaamaththuppaal ( Love )
- Iyal : Karpiyal ( The Post-marital love )
- Adikaram : Niraiyazhidhal ( Reserve Overcome )
Tanglish :
Pulappal Enachchendren Pullinen Nenjam
Kalaththal Uruvadhu Kantu
Couplet :
‘I ‘ll shun his greeting’; saying thus with pride away I went:I held him in my arms, for straight I felt my heart relent
Translation :
In huff I went and felt at ease Heat to heart in sweet embrace
Explanation :
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!