திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 313
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – இன்னா செய்யாமை
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும்.
மு. வரதராசன் உரை : தான் ஒன்றும் செய்யாதிருக்கத் தனக்குத் தீங்கு செய்தவர்க்கும் துன்பமானாவற்றைச் செய்தால் செய்தபிறகு தப்பமுடியாத துன்பத்தையே கொடுக்கும்.
சாலமன் பாப்பையா உரை : நாம் ஒரு தீமையும் செய்யாதிருக்க, கோபம் கொண்டு நமக்குத் தீமை செய்தவர்க்கு, நாம் தீமை செய்தால், தப்பிக்க முடியாத அளவு துன்பத்தை அது நமக்குத் தரும்.
கலைஞர் உரை : யாருக்கும் கேடு செய்யாமல் இருப்பவருக்குப் பகைவர் கேடு செய்துவிட்டால் அதற்குப் பதிலாக அவருக்கு வரும் கேடு மீளாத் துன்பம் தரக் கூடியதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Innaaseyyaamai ( Not doing Evil )
Tanglish :
Seyyaamal Setraarkkum Innaadha Seydhapin
Uyyaa Vizhuman Tharum
Couplet :
Though unprovoked thy soul malicious foes should sting,Retaliation wrought inevitable woes will bring
Translation :
Revenging even causeless hate Bad-blood breeds and baneful heat
Explanation :
In an ascetic inflict suffering even on those who hate him, when he has not done them any evil, it will afterwards give him irretrievable sorrow