திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 311
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – இன்னா செய்யாமை
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
மு. வரதராசன் உரை : சிறப்பைத்தருகின்ற பெருஞ் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும், பிறர்க்குத் துன்பம் செய்யாதிருத்தலே மாசற்றவரின் கொள்கையாம்.
சாலமன் பாப்பையா உரை : சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கை.
கலைஞர் உரை : மிகுந்த செழிப்பைத் தருகின்ற செல்வத்தைப் பெறக் கூடுமென்றாலும் அதன் பொருட்டுப் பிறருக்குப் கேடு செய்யாமலிருப்பதே மாசற்றவர்களின் கொள்கையாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Innaaseyyaamai ( Not doing Evil )
Tanglish :
Sirappeenum Selvam Perinum Pirarkku
Innaa Seyyaamai Maasatraar Kol
Couplet :
Though ill to neighbour wrought should glorious pride of wealth secure,No ill to do is fixed decree of men in spirit pure
Translation :
The pure by faith mean pain to none Though princely wealth by that is won
Explanation :
It is the determination of the spotless not to cause sorrow to others, although they could (by so causing) obtain the wealth which confers greatness