திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 68
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – மக்கட்பேறு
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது.
மு. வரதராசன் உரை : தம் மக்களின் அறிவுடைமை தமக்கு இன்பம் பயப்பதை விட உலகத்து உயிர்களுக்கேல்லாம் மிகுந்த இன்பம் பயப்பதாகும்.
சாலமன் பாப்பையா உரை : தம் பிள்ளைகள் அறிவு மிக்கவராக இருப்பது, தம்மைக் காட்டிலும், இப்பெரிய பூமியில் அழியாமல் தொடரும் உயிர்களுக்கு எல்லாம் இனிது.
கலைஞர் உரை : பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pudhalvaraip Perudhal ( The Wealth of Children )
Tanglish :
Thammindham Makkal Arivutaimai Maanilaththu
Mannuyirk Kellaam Inidhu
Couplet :
Their children’s wisdom greater than their own confessed,Through the wide world is sweet to every human breast
Translation :
With joy the hearts of parents swell To see their children themselves excel
Explanation :
That their children should possess knowledge is more pleasing to all men of this great earth than to themselves