திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 251
- பால் – அறத்துப்பால்
- இயல் – துறவறவியல்
- அதிகாரம் – புலால் மறுத்தல்
தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்?
மு. வரதராசன் உரை : தன் உடம்பைப் பெருக்கச் செய்வதற்காகத் தான் மற்றோர் உயிரின் உடம்பைத் தின்கின்றவன் எவ்வாறு அருளுடையவனாக இருக்க முடியும்.
சாலமன் பாப்பையா உரை : தன் உடம்பை வளர்ப்பதற்காக இன்னோர் உடம்பைத் தின்பவன் மனத்துள் இரக்கம் எப்படி இருக்கும்?
கலைஞர் உரை : தன் உடலை வளர்ப்பதற்காக வேறொரு உயிரின் உடலை உணவாக்கிக் கொள்பவர் எப்படிக் கருணையுள்ளம் கொண்டவராக இருக்க முடியும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Thuravaraviyal ( Ascetic Virtue )
- Adikaram : Pulaanmaruththal ( Abstinence from Flesh )
Tanglish :
Thannoon Perukkarkuth Thaanpiridhu Oonunpaan
Engnganam Aalum Arul?
Couplet :
How can the wont of ‘kindly grace’ to him be known,Who other creatures’ flesh consumes to feed his own
Translation :
What graciousness can one command who feeds his flesh by flesh gourmand
Explanation :
How can he be possessed of kindness, who to increase his own flesh, eats the flesh of other creatures