திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 236
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – புகழ்
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
மு. வரதராசன் உரை : ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.
சாலமன் பாப்பையா உரை : பிறர் அறியுமாறு அறிமுகமானால் புகழ் மிக்கவராய் அறிமுகம் ஆகுக; புகழ் இல்லாதவர் உலகு காணக் காட்சி தருவதிலும், தராமல் இருப்பதே நல்லது.
கலைஞர் உரை : எந்தத் துறையில் ஈடுபட்டாலும் அதில் புகழுடன் விளங்கவேண்டும்; இயலாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pukazh ( Renown )
Tanglish :
Thondrin Pukazhotu Thondruka Aqdhilaar
Thondralin Thondraamai Nandru
Couplet :
If man you walk the stage, appear adorned with glory’s grace;Save glorious you can shine, ’twere better hide your face
Translation :
Be born with fame if birth you want If not of birth you must not vaunt
Explanation :
If you are born (in this world), be born with qualities conductive to fame From those who are destitute of them it will be better not to be born