Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Uranennum Thottiyaan Oraindhum Kaappaan Varanennum Vaippirkor Viththu | உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் | Kural No - 24 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான் வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. | குறள் எண் – 24

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 24
  • பால் – அறத்துப்பால்
  • இயல் – பாயிரவியல்
  • அதிகாரம் – நீத்தார் பெருமை

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து.

மு. வரதராசன் உரை : அறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்

சாலமன் பாப்பையா உரை : மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்

கலைஞர் உரை : உறுதியென்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளையும் அடக்கிக் காப்பவன், துறவறம் எனும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Araththuppaal ( Virtue )
  • Iyal : Paayiraviyal ( Prologue )
  • Adikaram : Neeththaar Perumai ( The Greatness of Ascetics )

Tanglish :

Uranennum Thottiyaan Oraindhum Kaappaan

Varanennum Vaippirkor Viththu

Couplet :

He, who with firmness, curb the five restrains,Is seed for soil of yonder happy plains

Translation :

With hook of firmness to restrain The senses five, is heaven to gain

Explanation :

He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme