Skip to content
kaapiyam-logo

தமிழ் வலைத்தளம்

Menu
  • திருக்குறள்
  • உணவே மருந்து
  • சமையல்
  • அழகு குறிப்புகள்
Menu
Vaalatrup Purkendra Kannum Avarsendra Naalotrith Theyndha Viral | வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற | Kural No - 1261 | Thirukkural Meaning & Definition in Tamil and English
View   Download  

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற நாளொற்றித் தேய்ந்த விரல். | குறள் எண் – 1261

Updated on December 14, 2020January 4, 2023 by admin

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

  • குறள் எண் – 1261
  • பால் – காமத்துப்பால்
  • இயல் – கற்பியல்
  • அதிகாரம் – அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற

நாளொற்றித் தேய்ந்த விரல்.

மு. வரதராசன் உரை : என் கண்களும் அவர் வரும் வழியைப் பார்த்துப் பார்த்து ஒளி இழந்து அழகு கெட்டன; விரல்களும் அவர் சென்ற நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டுத் தேய்ந்தன.

சாலமன் பாப்பையா உரை : அவர் என்னைப் பிரிந்து போன நாள்களைச் சுவரில் குறித்துத் தொட்டு எண்ணுவதால் என் விரல்கள் தேய்ந்து விட்டன; அவர் வரும் வழியைப் பார்த்து என் கண்களும் ஒளி இழந்து, நுண்ணியவற்றைக் காணும் திறனில் குறைந்து விட்டன.

கலைஞர் உரை : வருவார் வருவார் என வழி பார்த்துப் பார்த்து விழிகளும் ஒளியிழந்தன; பிரிந்து சென்றுள்ள நாட்களைச் சுவரில் குறியிட்டு அவற்றைத் தொட்டுத் தொட்டு எண்ணிப் பார்த்து விரல்களும் தேய்ந்தன

ஆங்கில மொழியாக்கம்

  • Kural No : 1
  • Paul : Kaamaththuppaal ( Love )
  • Iyal : Karpiyal ( The Post-marital love )
  • Adikaram : Avarvayinvidhumpal ( Mutual Desire )

Tanglish :

Vaalatrup Purkendra Kannum Avarsendra

Naalotrith Theyndha Viral

Couplet :

My eyes have lost their brightness, sight is dimmed; my fingers worn,With nothing on the wall the days since I was left forlorn

Translation :

My eyes are dim lustre-bereft Worn fingers count days since he left

Explanation :

My finger has worn away by marking (on the wall) the days he has been absent while my eyes have lost their lustre and begin to fail

Share this:

  • Facebook
  • WhatsApp
  • Telegram
  • Twitter

மேலே உள்ள திருக்குறள் பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்... Cancel reply

"காப்பியம்" - தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட வலைத்தளம்.இங்கு தொழில்நுட்பம், அழகு குறிப்புகள், அரசியல், விளையாட்டு, சமையல், போன்ற அனைத்து துறைகளிலும் உள்ள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டு தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அனைத்து பதிவுகளும் தமிழிலேயே இயற்றப்பட்டுள்ளன.
வாழ்க தமிழ்!!!!

© 2023 | Powered by Superbs Personal Blog theme