திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 861
- பால் – பொருட்பால்
- இயல் – நட்பியல்
- அதிகாரம் – பகை மாட்சி
வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை.
மு. வரதராசன் உரை : தம்மை விட வலியவர்க்கு மாறுபட்டு எதிர்த்தலை விட வேண்டும், தம்மை விட மெலியவர் மேல் பகைக் கொள்வதை விடாமல் விரும்பி மேற்கொள்ள வேண்டும்.
சாலமன் பாப்பையா உரை : பகைவர் நம்மிலும் வலியர் என்றால் அவரை எதிர்ப்தைத் தவிர்த்து விடுக; மெலியர் என்றால் உடனே எதிர்த்துச் செல்க.
கலைஞர் உரை : மெலியோரை விடுத்து, வலியோரை எதிர்த்துப் போரிட விரும்புவதே பகைமாட்சி எனப் போற்றப்படும்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Porutpaal ( Wealth )
- Iyal : Natpiyal ( Friendship )
- Adikaram : Pakaimaatchi ( The Might of Hatred )
Tanglish :
Valiyaarkku Maaretral Ompuka Ompaa
Meliyaarmel Meka Pakai
Couplet :
With stronger than thyself, turn from the strife away;With weaker shun not, rather court the fray
Translation :
Turn from strife with foes too strong With the feeble for battle long
Explanation :
Avoid offering resistance to the strong; (but) never fail to cherish enmity towards the weak