திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
- குறள் எண் – 240
- பால் – அறத்துப்பால்
- இயல் – இல்லறவியல்
- அதிகாரம் – புகழ்
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
மு. வரதராசன் உரை : தாம் வாழும் வாழ்க்கையில் பழி உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழ்கின்றவர், புகழ் உண்டாகாமல் வாழ்கின்றவரே உயிர் வாழாதவர்.
சாலமன் பாப்பையா உரை : தம்மீது பழி இன்றிப் புகழோடு வாழ்பவரே உயிரோடு வாழ்பவர்; புகழ் இன்றிப் பழியோடு வாழ்பவர் இருந்தும் இல்லாதவரே.
கலைஞர் உரை : பழி உண்டாகாமல் வாழ்வதே வாழ்க்கை எனப்படும், புகழ் இல்லாதவர் வாழ்வதும் வாழாததும் ஒன்றுதான்
ஆங்கில மொழியாக்கம்
- Kural No : 1
- Paul : Araththuppaal ( Virtue )
- Iyal : Illaraviyal ( Domestic Virtue )
- Adikaram : Pukazh ( Renown )
Tanglish :
Vasaiyozhiya Vaazhvaare Vaazhvaar Isaiyozhiya
Vaazhvaare Vaazhaa Thavar
Couplet :
Who live without reproach, them living men we deem;Who live without renown, live not, though living men they seem
Translation :
They live who live without blemish The blameful ones do not flurish
Explanation :
Those live who live without disgrace Those who live without fame live not