காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. | குறள் எண் - 122

kaakka-porulaa-atakkaththai-aakkam-adhaninooung-killai-uyirkku-122

44

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.

"மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும் அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை"

கலைஞர் உரை

"அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் ‌காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை."

மு. வரதராசன் உரை

"அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: உயிர்க்கு அதனின் ஊங்கு ஆக்கம் இல்லை - உயிர்கட்கு அடக்கத்தின் மிக்க செல்வம் இல்லை; அடக்கத்தைப் பொருளாகக் காக்க - ஆதலான் அவ்வடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காக்க. (உயிர் என்பது சாதியொருமை. அஃது ஈண்டு மக்கள் உயிர்மேல் நின்றது, அறிந்து அடங்கிப் பயன் கொள்வது அதுவே ஆகலின்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண்டாக்குக. அவனுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அடக்கத்தினை உறுதிப் பொருளாகக் கொண்டு அழியாமல் காத்தல் வேண்டும். ஏனெனில், மக்களுயிர்க்குச் செல்வாய் பெருக்கமானது அதனைவிடப் பிறிது யாதும் இல்லை. "

வி முனுசாமி உரை

Kaakka Porulaa Atakkaththai Aakkam
Adhaninooung Killai Uyirkku

Couplet

Guard thou as wealth the power of self-control;Than this no greater gain to living soul

Translation

No gains with self-control measure Guard with care this great treasure

Explanation

Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that

44

Write Your Comment