அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார் — வழுக்காயும் கேடீன் பது. | குறள் எண் - 165

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
கலைஞர் உரை
பொறாமைக் குணம் கொண்டவர்களுக்கு அவர்களை வீழ்த்த வேறு பகையே வேண்டா அந்தக் குணமே அவர்களை வீழ்த்தி விடும்
மு. வரதராசன் உரை
பொறாமை உடையவர்க்கு வேறு பகை வேண்டா. அஃது ஒன்றே போதும், பகைவர் தீங்கு செய்யத் தவறினாலும் தவறாது கேட்டைத் தருவது அது.
சாலமன் பாப்பையா உரை
பொறாமை உடையவர்க்குத் தீமை தரப் பகைவர் வேண்டியதில்லை; பொறாமையே போதும்
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: ஒன்னார் வழுக்கியும் கேடு ஈன்பது - அழுக்காறு பகைவரைஒழிந்தும் கேடு பயப்பதொன்று ஆகலின்; அழுக்காறு உடையார்க்கு அது சாலும் - அவ்வழுக்காறு உடையார்க்குப் பகைவர் வேண்டா; கேடு பயப்பதற்கு அதுதானே அமையும். ('அதுவே' என்னும் பிரிநிலை ஏகாரம் விகாரத்தால் தொக்கது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்: பகைவர் கேடுபயத்தல் தப்பியும் கெடுப்பதற்கு, இஃது உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அழுக்காறு (பொறாமை) உடையவர்களுக்குப் பகைவர்கள் தீமை செய்ய வேண்டுவதில்லை. ஏனெனில், அப்பொறாமைக் குணமே அவர்களை அழிப்பதற்குப் போதுமானதாகும்.
Azhukkaaru Utaiyaarkku Adhusaalum Onnaar
Vazhukka�yum Keteen Padhu
Couplet
Envy they have within! Enough to seat their fate!Though foemen fail, envy can ruin consummate
Translation
Man shall be wrecked by envy's whim Even if enemies spare him
Explanation
To those who cherish envy that is enough Though free from enemies that (envy) will bring destruction
Comments (3)

Nirvi Karan
4 weeks ago
A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

Rhea Sagar
4 weeks ago
Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை?
Illadhen Illaval Maanpaanaal Ulladhen
Illaval Maanaak Katai?
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Abram Dhingra
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.