ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி. | குறள் எண் - 137

Thirukkural Tamil & English Definition
திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார் க்கப் போகும் குறள்.
ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி.
கலைஞர் உரை
"நல்ல நடத்தையினால் உயர்வு ஏற்படும்; இல்லையேல் இழிவான பழி வந்து சேரும்"
மு. வரதராசன் உரை
"ஒழுக்கத்தால் எவரும் மேம்பாட்டை அடைவர்; ஒழுக்கத்திலிருந்து தவறுதலால் அடையத் தகாத பெரும் பழியை அடைவர்."
சாலமன் பாப்பையா உரை
"ஒழுக்கத்தினால் உயர்வை அடைவர்; ஒழுக்கம் இல்லாதவர் வேண்டாத பழியை அடைவர்."
பாரி மேலகர் உரை
"பரிமேலழகர் உரை: ஒழுக்கத்தின் மேன்மை எய்துவர் - எல்லாரும் ஒழுக்கத்தானே மேம்பாட்டை எய்துவர்; இழுக்கத்தின் எய்தாப்பழி எய்துவர் - அதனின்றும் இழுக்குதலானே தாம் எய்துவதற்கு உரித்தல்லாத பழியை எய்துவர். (பகை பற்றி அடாப்பழி கூறியவழி, அதனையும் இழுக்கம் பற்றி உலகம் அடுக்கும் என்று கொள்ளுமாகலின், எய்தாப் பழி எய்துவர் என்றார். இவை ஐந்து பாட்டானும் ஒழுக்கம் உள்வழிப்படும் குணமும், இல்வழிப்படும் குற்றமும் கூறப்பட்டன.). "
மணி குடவர் உரை
"மணக்குடவர் உரை: ஒழுக்கத்தாலே தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையாலே தமக்கு அடாதபழியை எய்துவர். "
வி முனுசாமி உரை
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எல்லோரும் ஒழுக்கத்தினால் மேம்பாட்டினை அடைவார்கள். ஒழுக்கத்திலிருந்து தவறுவதனால் அடைந்து வீடாக கூடாத பழியினை அடைய பெறுவர். "
Ozhukkaththin Eydhuvar Menmai Izhukkaththin Eydhuvar Eydhaap Pazhi
Couplet
'Tis source of dignity when 'true decorum' is preserved;Who break 'decorum's' rules endure e'en censures undeserved
Translation
Conduct good ennobles man, Bad conduct entails disgrace mean
Explanation
From propriety of conduct men obtain greatness; from impropriety comes insufferable disgrace
Write Your Comment