பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை — மறத்தல் அதனினும் நன்று. | குறள் எண் - 152

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று.
கலைஞர் உரை
அளவுகடந்து செய்யப்பட்ட தீங்கைப் பொறுத்துக் கொள்வதைக் காட்டிலும், அந்தத் தீங்கை அறவே மறந்து விடுவதே சிறந்த பண்பாகும்
மு. வரதராசன் உரை
வரம்பு கடந்து பிறர் செய்யும் தீங்கை எப்போதும் பொறுக்க வேண்டும்; அத் தீங்கை நினைவிலும் கொள்ளாமல் மறந்து விடுதல் பொறுத்தலை விட நல்லது.
சாலமன் பாப்பையா உரை
தீமையைத் தண்டிக்க முடியும் என்றபோதும் பொறுத்துக் கொள்க; அந்தத் தீமையை மனத்துள் வைக்காமல் மறந்தே விடுவது பொறுத்தலையும் விட நல்லது.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: என்றும் இறப்பினைப் பொறுத்தல்-பொறை நன்றாகலான், தாம் ஒறுத்தற்கு இயன்ற காலத்தும் பிறர் செய்த மிகையைப் பொறுக்க; அதனை மறத்தல் அதனினும் நன்று-அதனை உட்கொள்ளாது அப்பொழுதே மறத்தல் பெறின்அப்பொறையினும் நன்று. ('மிகை' என்றது மேற்சொல்லிய இரண்டினையும் பொறுக்குங்காலும் உட்கொள்ளப்படுதலின், மறத்தலை 'அதனினும் நன்று' என்றார்).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: பிறர் செய்த மிகையினை யென்றும் பொறுத்தல் நன்று; அதனை மறத்தல் அப்பொறையினும் நன்று.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: பிறர் செய்த குற்றத்தினை எப்போதும் பொறுத்துக்கொள்ளுதல் நல்லதாகும், அக்குற்றத்தினை மறந்துவிடுதல் அப்பொறுமையினையும் விடச் சிறந்ததாகும்.
Poruththal Irappinai Endrum Adhanai
Maraththal Adhaninum Nandru
Couplet
Forgiving trespasses is good always;Forgetting them hath even higher praise;
Translation
Forgive insults is a good habit Better it is to forget it
Explanation
Bear with reproach even when you can retaliate; but to forget it will be still better than that
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்.
Atuththadhu Kaattum Palingupol Nenjam
Katuththadhu Kaattum Mukam
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Vedika Srinivas
4 weeks ago
Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.