அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் — புறங்கூறான் என்றல் இனிது. | குறள் எண் - 181

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது.
கலைஞர் உரை
அறநெறியைப் போற்றாமலும், அவ்வழியில் நடக்காமலும்கூட இருக்கின்ற சிலர் மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசாமல் இருந்தால், அது அவர்களுக்கு நல்லது
மு. வரதராசன் உரை
ஒருவன் அறத்தைப் போற்றிக் கூறாதவனாய் அறமல்லாதவற்றைச் செய்தாலும், மற்றவனைப் பற்றிப் புறங்கூறாமல் இருக்கிறான் என்று சொல்லப்படுதல் நல்லது.
சாலமன் பாப்பையா உரை
ஒருவன் அறத்தைச் சொல்லாமல் பாவமே செய்தாலும், அடுத்தவரைப் பற்றிப் புறம் பேசமாட்டான் என்றால் அதுவே அவனுக்கு நல்லது
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: [அஃதாவது, காணாதவழிப் பிறரை இகழ்ந்து உரையாமை. மொழிக்குற்றம் மனக்குற்றம் அடியாக வருதலான், இஃது அழுக்காறாமை வெஃகாமைகளின்பின் வைக்கப்பட்டது.) ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறன் என்று சொல்லுவதும் செய்யாது பாவங்களைச் செய்யுமாயினும்; புறம் கூறான் என்றல் இனிது - பிறனைப் புறம் கூறான் என்று உலகத்தாரால் சொல்லப்படுதல் நன்று, (புறம் கூறாமை அக்குற்றங்களான் இழிக்கப்படாது, மேற்பட்டுத் தோன்றும் என்பதாம். இதனால் அவ்வறத்தினது நன்மை கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: ஒருவன் அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும் பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத்தாரால் கூறப்படுதல் நன்றாம், இது பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் அறத்தினைச் செய்யாமல் தீயவற்றைச் செய்தாலும் கூடப் 'புறங்கூறாதவன்' என்று மக்களால் சொல்லப்படுதல் நல்லதாகும்.
Arangooraan Alla Seyinum Oruvan
Purangooraan Endral Inidhu
Couplet
Though virtuous words his lips speak not, and all his deeds are illIf neighbour he defame not, there's good within him still
Translation
Though a man from virtue strays, To keep from slander brings him praise
Explanation
Though one do not even speak of virtue and live in sin, it will be well if it be said of him "he does not backbite."
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்.
Utraan Alavum Piniyalavum Kaalamum
Katraan Karudhich Cheyal
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Umang Halder
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.