பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின் — நன்மை கடலின் பெரிது. | குறள் எண் - 103

Thirukkural Verse 103

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்

நன்மை கடலின் பெரிது.

கலைஞர் உரை

என்ன பயன் கிடைக்கும் என்று எண்ணிப் பார்க்காமலே, அன்பின் காரணமாக ஒருவர் செய்த உதவியின் சிறப்பு கடலை விடப் பெரிது

மு. வரதராசன் உரை

இன்ன பயன் கிடைக்கும் என்றுஆராயாமல் ஒருவன் செய்த உதவியின் அன்புடைமையை ஆராய்ந்தால் அதன் நன்மை கடலைவிட பெரியதாகும் .

சாலமன் பாப்பையா உரை

இவருக்கு உதவினால் பிறகு நமக்கு இது கிடைக்கும் என்று எண்ணாதவராய் ஒருவர் செய்த உதவியின் அன்பை ஆய்ந்து பார்த்தால், அவ்வுதவியின் நன்மை கடலைவிடப் பெரியது ஆகும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: பயன்தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின் - இவர்க்கு இது செய்தால் இன்னது பயக்கும் என்று ஆராய்தல் இலராய்ச் செய்த உதவியாகிய ஈரமுடைமையை ஆராயின்; நன்மை கடலின் பெரிது - அதன் நன்மை கடலினும் பெரிது ஆம். (இவை மூன்று பாட்டானும் முறையே காரணம் இன்றிச் செய்ததூஉம், காலத்தினால் செய்ததூஉம், பயன் தூக்காராய்ச் செய்ததூஉம் அளவிலவாதல் கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: தமக்கொரு பயனை நோக்காதவராய்ச் செய்த வுபகாரத்தாலுண்டாய நன்மையை யாராயின், அதனா லுண்டாய நன்மை கடலினும் பெரிது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தனக்குத் திரும்பி வருகின்ற பயனைக் கருதாமல் ஒருவன் செய்த உதவியினை ஆராய்ந்து பார்த்தால் அதன் நன்மை கடலையும் விடப் பெரிதானதாகும்.

Payandhookkaar Seydha Udhavi Nayandhookkin

Nanmai Katalin Peridhu

Couplet

Kindness shown by those who weigh not what the return may be:When you ponder right its merit, 'Tis vaster than the sea

Translation

Help rendered without weighing fruits Outweighs the sea in grand effects

Explanation

If we weigh the excellence of a benefit which is conferred without weighing the return, it is larger than the sea

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்

அழுக்காற்றின் அன்மை பெறின்.

Vizhuppetrin Aqdhoppadhu Illaiyaar Maattum

Azhukkaatrin Anmai Perin

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.