அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். | குறள் எண் - 178

aqkaamai-selvaththirku-yaadhenin-veqkaamai-ventum-pirankaip-porul-178

19

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

"தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்"

கலைஞர் உரை

"ஒருவனுடைய செல்வத்திற்குக் குறைவு நேராதிருக்க வழி எது என்றால், அவன் பிறனுடைய கைப்பொருளை விரும்பாதிருத்தலாகும்."

மு. வரதராசன் உரை

"செல்வம் குறையாமல் இருக்க வழி என்ன என்றால், பிறனுக்கு உரிய பொருளை விரும்பாமல் இருப்பதே."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: செல்வத்திற்கு அஃகாமை யாதெனின் - சுருங்கல் மாலைத்தாகிய செல்வத்திற்குச் சுருங்காமைக் காரணம் யாது என்று ஒருவன் ஆராயின்; பிறன் வேண்டும் கைப்பொருள் வெஃகாமை - அது பிறன் வேண்டும் கைப்பொருளைத் தான் வேண்டாமையாம். ('அஃகாமை' ஆகுபெயர். வெஃகாதான் செல்வம் அஃகாது என்பதாயிற்று.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: செல்வஞ் சுருங்காமைக்குக் காரண மியாதோவெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, இது செல்வ மழியாதென்றது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: செல்வமானது குறைந்து போகாமல் இருப்பதற்குக் காரணம் யாதென்று ஆராய்ந்தால், அது மற்றவனுக்கு உரிமையான பொருளினைத் தான் விரும்பாதிருத்தல் வேண்டும் என்பதாகும். "

வி முனுசாமி உரை

Aqkaamai Selvaththirku Yaadhenin Veqkaamai
Ventum Pirankaip Porul

Couplet

What saves prosperity from swift decline?Absence of lust to make another's cherished riches thine

Translation

The mark of lasting wealth is shown By not coveting others' own

Explanation

If it is weighed, "what is the indestructibility of wealth," it is freedom from covetousness

19

Write Your Comment