அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப் — பொல்லாத சூழக் கெடும். | குறள் எண் - 176

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்.
கலைஞர் உரை
அருளை விரும்பி அதனை அடைவதற்கான வழியில் செல்பவன் தவறிப்போய்ப் பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயலில் ஈடுபட்டால் கெட்டொழிய நேரிடும்
மு. வரதராசன் உரை
அருளை விரும்பி அறநெறியில் நின்றவன், பிறனுடைய பொருளை விரும்பிப் பொல்லாத குற்றங்களை எண்ணினால் கெடுவான்.
சாலமன் பாப்பையா உரை
அருளை விரும்பிக் குடும்ப வாழ்வில் இருப்பவன், பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டுப் பொல்லாதது செய்தால், அவன் கெட்டுப் போவான்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: அருள் வெஃகி ஆற்றின் கண் நின்றான் - அருளாகிய அறத்தை விரும்பி அதற்கு வழியாகிய இல்லறத்தின்கண் நின்றவன்; பொருள் வெஃகிப் பொல்லாத சூழக் கெடும் - பிறர் பொருளை அவாவி அதனை வருவிக்கும் குற்ற நெறிகளை எண்ணக் கெடும். (இல்லற நெறியில் அறிவு முதிர்ந்துழி அல்லது துறக்கப் படாமையின், அதனைத் துறவறத்திற்கு 'ஆறு' என்றார். கெடுதல்: இரண்டு அறமும் சேர இழத்தல். 'சூழ்ந்த துணையானே கெடும்' எனவே, செய்தால் கெடுதல் சொல்லாமையே பெறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: அருளை விரும்பி யறனெறியிலே நின்றவனும் பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன், இஃது அருளுடையானுங் கெடுவனென்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: அருளாகிய அறம் என்பதனை விரும்பி நன்னெறியில் நின்றவன் பிறன் பொருளினை விரும்பித் தீமையான வழிகளை நினைப்பானாகில் கெட்டுவிடுவான்.
Arulveqki Aatrinkan Nindraan Porulveqkip
Pollaadha Soozhak Ketum
Couplet
Though, grace desiring, he in virtue's way stand strong,He's lost who wealth desires, and ponders deeds of wrong
Translation
Who seeks for grace on righteous path Suffers by evil covetous wealth
Explanation
If he, who through desire of the virtue of kindness abides in the domestic state ie, the path in which it may be obtained, covet (the property of others) and think of evil methods (to obtain it), he will perish
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
Iyatralum Eettalung Kaaththalum Kaaththa
Vakuththalum Valla Tharasu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Vivaan Sheth
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.