படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் — நடுவன்மை நாணு பவர். | குறள் எண் - 172

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்.
கலைஞர் உரை
நடுவுநிலை தவறுவது நாணித் தலைகுனியத் தக்கது என்று நினைப்பவர் தமக்கு ஒரு பயன் கிடைக்கும் என்பதற்காக, பழிக்கப்படும் செயலில் ஈடுபடமாட்டார்
மு. வரதராசன் உரை
நடுவுநிலைமை அல்லாதவற்றைக் கண்டு நாணி ஒதுங்குகின்றவர், பிறர் பொருளைக் கவர்வதால் வரும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யார்.
சாலமன் பாப்பையா உரை
பிறர் பொருளைக் கவர்ந்து அனுபவிக்க எண்ணிப் பழி தரும் செயல்களை, நீதிக்கு அஞ்சுபவர் செய்ய மாட்டார்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார் - பிறர் பொருளை வௌவினால் தமக்கு வரும் பயனை விரும்பி, அது வௌவுதற்குப் பழியின்கண்ணே படுஞ்செயல்களைச் செய்யார்; நடுவு அன்மை நாணுபவர் - நடுவு நிலைமை அன்மையை அஞ்சுபவர். ('நடுவு' ஒருவன் பொருட்குப் பிறன் உரியன் அல்லன் என்னும் நடுவு.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: தமக்குப் பயனுண்டாக வேண்டிப் பழியொடுபடுவன செய்யார், நடுவன்மைக்கு நாணுபவர். இது நடுவுநிலைமை வேண்டுபவர் செய்யாரென்றது.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நடுவு நிலைமை இல்லாதிருப்பதற்கு அஞ்சுபவர்கள் பின்னர் வரும் பயனை விரும்பிப் பழிக்கு ஆளாகக் கூடிய செயல்களை செய்ய மாட்டார்கள்.
Patupayan Veqkip Pazhippatuva Seyyaar
Natuvanmai Naanu Pavar
Couplet
Through lust of gain, no deeds that retribution bring,Do they, who shrink with shame from every unjust thing
Translation
Who shrink with shame from sin, refrain From coveting which brings ruin
Explanation
Those who blush at the want of equity will not commit disgraceful acts through desire of the profit that may be gained
Comments (3)

Amani Divan
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Ryan Jhaveri
4 weeks ago
Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.
Vaaimai Enappatuvadhu Yaadhenin Yaadhondrum
Theemai Ilaadha Solal
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Uthkarsh Malhotra
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.