செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான் — நல்வருந்து வானத் தவர்க்கு. | குறள் எண் - 86

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு.
கலைஞர் உரை
வந்த விருந்தினரை உபசரித்து அவர்களை வழியனுப்பி வைக்கும்போதே, மேலும் வரக்கூடிய விருந்தினரை ஆவலுடன் எதிர்நோக்கி நிற்பவனை, புகழ்வானில் இருப்போர் நல்ல விருந்தினன் என்று வரவேற்றுப் போற்றுவர்
மு. வரதராசன் உரை
வந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்
சாலமன் பாப்பையா உரை
வந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: செல் லிருந்து ஓம்பி வருவிருந்து பார்த்து இருப்பான் - தன் கண்சென்ற விருந்தைப் பேணிப் பின் செல்லக் கடவ விருந்தைப் பார்த்துத் தான், அதனோடு உண்ண இருப்பான்; வானத்தவர்க்கு நல் விருந்து - மறுபிறப்பில் தேவனாய் வானிலுள்ளார்க்கு நல் விருந்து ஆம். ('வருவிருந்து' என்பது இடவழு அமைதி. நல்விருந்து: எய்தா விருந்து. இதனான் மறுமைக்கண் எய்தும் பயன் கூறப்பட்டது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: வந்த விருந்தினரைப் போற்றி வாராத விருந்தினரது வரவு பார்த்திருக்குமவன், வானத்தவர்க்கு நல்விருந்தாவன். வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: வந்த விருந்தினரைப் போற்றி உபசரித்து அனுப்பி வைத்து, வருகின்ற விருந்தினரை எதிர்நோக்கி அவருடன் உண்ண இருப்பவன் வானத்தவர்க்கு நல்ல விருந்தினனாவான்.
Selvirundhu Ompi Varuvirundhu Paarththiruppaan
Nalvarundhu Vaanath Thavarkku
Couplet
The guest arrived he tends, the coming guest expects to see;To those in heavenly homes that dwell a welcome guest is he
Translation
Who tends a guest and looks for next Is a welcome guest in heaven's feast
Explanation
He who, having entertained the guests that have come, looks out for others who may yet come, will be a welcome guest to the inhabitants of heaven
Comments (3)

Anya Goswami
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Vidur Rattan
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.
Mananalam Nankutaiya Raayinum Saandrorkku
Inanalam Emaap Putaiththu
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Ryan Jhaveri
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.