துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். | குறள் எண் - 378

thurappaarman-thuppura-villaar-urarpaala-oottaa-kazhiyu-menin-378

26

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்.

"நுகர்வதற்குரியது எதுவுமில்லை என்ற உறுதியினால், தம்மை வருத்தக்கூடிய உணர்வுகள் வந்து வருத்தாமல் நீங்கிவிடுமானால் துறவறம் மேற்கொள்வர்"

கலைஞர் உரை

"வரவேண்டிய துன்பங்கள் வந்து வருத்தாமல் நீங்குமானால் நுகரும் பொருள் இல்லாத வறியவர் துறவறம் மேற்க்கொள்வர்."

மு. வரதராசன் உரை

"துன்பங்களை அனுபவிக்க வேண்டும் என்னும் விதி, ஏழைகளைத் தடுத்திருக்கவில்லை என்றால், அவர்கள் துறவியர் ஆகியிருப்பார்கள்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: துப்புரவு இல்லார் துறப்பார் - வறுமையான் நுகர்ச்சி இல்லாதார் துறக்கும் கருத்துடையராவர், உறற்பால ஊட்டா கழியும் எனின் - ஊழ்கள் உறுதற்பாலவாய துன்பங்களை உறுவியாது ஒழியுமாயின். ('துறப்பார்' என்பது ஆர்ஈற்று எதிர்கால முற்றுச்சொல். தம்மால் விடப்பெறுவன தாமே விடப்பெற்று வைத்தும், கருத்து வேறுபாட்டால் துன்பமுறுகின்றது ஊழின் வலியான் என்பது எஞ்சி நிற்றலின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: நுகரும்பொரு ளில்லாதார் துறக்க அமைவர்: தமக்கு வந்துறுந் துன்பப்பகுதியானவை உறாதுபோமாயின். இது துறவறமானது ஊழினால் வருமென்றது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஊழ்வினைகள் அடைவிக்க வேண்டிய துன்பங்களை அடையும்படி செய்யாமல் நீங்குமேயானால், வறுமையினால் நுகர்தல் இல்லாதவர்கள் துறக்கம் கருத்துடையராவார்கள். "

வி முனுசாமி உரை

Thurappaarman Thuppura Villaar Urarpaala
Oottaa Kazhiyu Menin

Couplet

The destitute with ascetics merit share,If fate to visit with predestined ills would spare

Translation

The destitute desire will quit If fate with ills visit them not

Explanation

The destitute will renounce desire (and become ascetics), if (fate) do not make them suffer the hindrances to which they are liable, and they pass away

26

Write Your Comment