அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை — தான்வேண்டு மாற்றான் வரும். | குறள் எண் - 367

Thirukkural Verse 367

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை

தான்வேண்டு மாற்றான் வரும்.

கலைஞர் உரை

கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்

மு. வரதராசன் உரை

ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா உரை

ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: அவாவினை ஆற்ற அறுப்பின் - ஒருவன் அவாவினை அஞ்சித் துவரக் கெடுக்க வல்லன் ஆயின், தவா வினை தான் வேண்டும் ஆற்றான் வரும் - அவனுக்குக் கெடாமைக்கு ஏதுவாகிய வினை, தான் விரும்பும் நெறியானே உண்டாம். (கெடாமை - பிறவித் துன்பங்களான் அழியாமை. அதற்கு ஏதுவாகிய வினை என்றது, மேற்சொல்லிய துறவறங்களை. 'வினை' சாதி யொருமை. தான் விரும்பும் நெறி மெய்வருந்தா நெறி. 'அவாவினை முற்ற அறுத்தானுக்கு வேறுஅறஞ்செய்ய வேண்டா, செய்தன எல்லாம் அறமாம்' என்பது கருத்து. இதனால் அவா அறுத்தற் சிறப்புக் கூறப்பட்டது.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: ஆசையை மிகவும் போக்குவானாயின், கேடில்லாத வினைதான் வேண்டின நெறியாலே வரும்.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: ஒருவன் அவாவுக்கு அஞ்சி அதனை முழுதும் கெடுக்க வல்லவனானால், அவனுக்குக் கெடாமைக்குக் காரணமான வினை, தான் விரும்பும் நெறியாலே உண்டாவதாகும்.

Avaavinai Aatra Aruppin Thavaavinai

Thaanventu Maatraan Varum

Couplet

Who thoroughly rids his life of passion-prompted deed,Deeds of unfailing worth shall do, which, as he plans, succeed

Translation

Destroy desire; deliverance Comes as much as you aspire hence

Explanation

If a man thoroughly cut off all desire, the deeds, which confer immortality, will come to him, in the path in which he seeks them

Comments (1)

Armaan Handa
Armaan Handa
armaan handa verified

4 weeks ago

Aathichudi always leaves a strong impression on me. This one teaches discipline in such a simple yet effective way.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்

போற்றி வழங்கு நெறி.

Aatrin Aravarindhu Eeka Adhuporul

Potri Vazhangu Neri

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.