இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை — வேண்டும் பிறன்கண் செயல். | குறள் எண் - 316

Thirukkural Verse 316

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை

வேண்டும் பிறன்கண் செயல்.

கலைஞர் உரை

ஒருவன் தன்னுடைய வாழ்க்கையில் துன்பமானவை என்று அனுபவித்து அறிந்தவற்றை, மற்றவர்க்குச் செய்யாமலிருக்க வேண்டும்

மு. வரதராசன் உரை

ஒருவன் துன்பமானவை என்று தன் வாழ்க்கையில் கண்டு உணர்ந்தவைகளை மற்றவனிடத்தில் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

சாலமன் பாப்பையா உரை

தீமை எனத் தான் அறிந்தவற்றை அடுத்தவர்க்குச் செய்யாது இருக்க வேண்டும்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: இன்னா எனத் தான் உணர்ந்தவை - இவை மக்கட்கு இன்னாதன என அனுமானத்தால் தான் அறிந்தவற்றை, பிறன்கண் செயல் துன்னாமை வேண்டும் - பிறன் மாட்டுச் செய்தலை மேவாமை துறந்தவனுக்கு வேண்டும். (இன்பதுன்பங்கள் உயிர்க்குணம் ஆகலின், அவை காட்சி அளவையான் அறியப்படாமை அறிக. அறமும் பாவமும் உளவாவது மனம் உளனாயவழி ஆகலான், 'உணர்ந்தவை' என்றார்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: தான் இன்னாதன இவையென்று அறிந்தவற்றைப் பிறற்குச் செய்தலை மேவாமை வேண்டும். இஃது இன்னா செய்யாமை வேண்டு மென்றது.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: "இவை மக்களுக்குத் துன்பம் தருபவை" என் அறிந்தவற்றைத் துறவியானவன் பிறரிடத்தில் செய்வதைக் கருத்தில் கொள்ளாதிருத்தல் வேண்டும்.

Innaa Enaththaan Unarndhavai Thunnaamai

Ventum Pirankan Seyal

Couplet

What his own soul has felt as bitter pain,From making others feel should man abstain

Translation

What you feel as pain to yourself Do it not to the other-self

Explanation

Let not a man consent to do those things to another which, he knows, will cause sorrow

Comments (4)

Shaan Handa
Shaan Handa
shaan handa verified

4 weeks ago

Such clarity and depth! Every time I read this, I gain a new perspective.

Miraan Deo
Miraan Deo
miraan deo verified

4 weeks ago

This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Tara Lata
Tara Lata
tara lata verified

4 weeks ago

Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Jayesh Desai
Jayesh Desai
jayesh desai verified

4 weeks ago

A brilliant expression of character and virtue. It’s a guidepost for living an ethical life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.

Irandhum Uyirvaazhdhal Ventin Parandhu

Ketuka Ulakiyatri Yaan

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.