தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து — வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. | குறள் எண் - 274

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று.
கலைஞர் உரை
புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளைக் கண்ணி வைத்துப் பிடிப்பதற்கும், தவக்கோலத்தில் இருப்பவர்கள் தகாத செயல்களில் ஈடுபடுவதற்கும் வேறுபாடு இல்லை
மு. வரதராசன் உரை
தவக்கோலத்தில் மறைந்து கொண்டு தவம் அல்லாத தீயச்செயல்களைச் செய்தல், புதரில் மறைந்து கொண்டு வேடன் பறவைகளை வலைவீசிப் பிடித்தலைப் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
மேலான நிலையில் இருந்தும் கீழான செயல்களைச் செய்வது, வேட்டை ஆடுபவர் புதருக்குப் பின் மறைந்து நின்று பறவைகளைப் பிடிப்பது போலாம்.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: தவம் மறைந்து அல்லவை செய்தல் - அவ் வலிஇல் நிலைமையான் தவவேடத்தின்கண்ணே மறைந்து நின்று தவமல்லவற்றைச் செய்தல், வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்தற்று - வேட்டுவன் புதலின் கண்ணே மறைந்து நின்று புட்களைப் பிணித்தாற்போலும். ( 'தவம்' ஆகுபெயர்.தவம் அல்லவற்றைச் செய்தலாவது, பிறர்க்கு உரிய மகளிரைத் தன்வயத்தாக்குதல், இதுவும் இத்தொழில் உவமையான் அறிக.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: தவத்திலே மறைந்து தவ மல்லாதவற்றைச் செய்தல் வேட்டுவன் தூற்றிலே மறைந்து புள்ளைப் பிணித்தாற் போலும். அர்ச்சுனன் தவமறைந்தல்லவை செய்தான்.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: மனவலிமை இல்லாதவன், தவவேடத்தில் மறைந்து கொண்டு தவத்திற்குப் புறம்பானவற்றைச் செய்தல், வேட்டுவன் புதரிலே மறைந்து கொண்டு, பறவைகளை பிணித்தது போன்றதாகும்.
Thavamaraindhu Allavai Seydhal Pudhalmaraindhu
Vettuvan Pulsimizhth Thatru
Couplet
'Tis as a fowler, silly birds to snare, in thicket lurksWhen, clad in stern ascetic garb, one secret evil works
Translation
Sinning in saintly show is like Fowlers in ambush birds to strike
Explanation
He who hides himself under the mask of an ascetic and commits sins, like a sportsman who conceals himself in the thicket to catch birds
Comments (3)

Anvi Trivedi
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Zara Mane
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு.
Kalvaarkkuth Thallum Uyirnilai Kalvaarkkuth
Thallaadhu Puththe Lulaku
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Hiran Sarna
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.