துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை — இறைஇறவா நின்ற வளை. | குறள் எண் - 1157

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை.
கலைஞர் உரை
என்னை விட்டுத் தலைவன் பிரிந்து சென்றுள்ள செய்தியை என் முன்கை மூட்டிலிருந்து கழன்று விழும் வளையல் ஊரறியத் தூற்றித் தெரிவித்து விடுமே!
மு. வரதராசன் உரை
என் மெலிவால் முன் கையில் இறை கடந்து கழலும் வளையல்கள், தலைவன் விட்டுப் பிரிந்த செய்தியைப் பலரறியத் தெரிவித்துத் தூற்றாமலிருக்குமோ.
சாலமன் பாப்பையா உரை
அவர் என்னைப் பிரிய திட்டமிடுகிறார் என்பதை என் முன் கையிலிருந்து கழலும் வளையல்கள் எனக்குத் தெரிவிக்க மாட்டாவோ?
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) துறைவன் துறந்தமை - துறைவன் என்னைப் பிரியலுற்றமையை; முன் கை இறை இறவாநின்ற வளை தூற்றாகொல் - அவன் உணர்த்தாமல் தாமே உணர்ந்து என் முன் கையில் இறையினின்றும் கழலாநின்ற வளைகள் எனக்கு அறிவியாவோ? அவன் உணர்த்த உணர்ந்து வந்து நீ அறிவித்தல் வேண்டுமோ? (முன்னே நிகழ்ந்தமையின் 'துறந்தமை' என்றும், கேட்ட துணையான் மெலிந்து ஆற்றாமையின், 'இறவாநின்ற' என்றும் கூறினாள். 'அழுங்குவித்து வந்து கூறற்பாலை யல்¬யாய நீயும், இவ்வளைகள் செய்தனவே செய்தாய்' எனப் புலந்து கூறியவாறு.)
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: இறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? முன் கையின் இறையைக் கடவாநின்ற வளைகள். முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவா றாயிற்று.
வி முனுசாமி உரை
திருக்குறளார் வீ. முனிசாமி உரை: தலைவர் என்னைப் பிரிந்து செல்லுகின்றார் என்பதனை அவர் உணர்த்தாமலேயே தாமே உணர்ந்து என் முன் கையினின்றும் சுழலுகின்ற வளையல்கள் அறிவியாவோ?.
Thuraivan Thurandhamai Thootraakol Munkai
Iraiiravaa Nindra Valai
Couplet
The bracelet slipping from my wrist announced beforeDeparture of the Prince that rules the ocean shore
Translation
Will not my gliding bangles' cry The parting of my lord betray?
Explanation
Do not the rings that begin to slide down my fingers forebode the separation of my lord ?
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்.
Inmai Enavoru Paavi Marumaiyum
Immaiyum Indri Varum
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Baiju Sidhu
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.