கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர் — படாஅ முலைமேல் துகில். | குறள் எண் - 1087

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.
கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில்.
கலைஞர் உரை
மதங்கொண்ட யானையின் மத்தகத்தின் மேலிட்ட முகபடாம் கண்டேன்; அது மங்கையொருத்தியின் சாயாத கொங்கை மேல் அசைந்தாடும் ஆடைபோல் இருந்தது
மு. வரதராசன் உரை
மாதருடைய சாயாத கொங்கைகளின் மேல் அணிந்த ஆடை, மதம் பிடித்த யானையின் மேல் இட்ட முகப்படாம் போன்றது.
சாலமன் பாப்பையா உரை
அந்தப் பெண்ணின் சாயாத முலைமேல் இருக்கும் சேலை, கொல்லம் மதம் பிடித்த ஆண் யானையின் முகபடாம் போன்று இருக்கிறது.
பாரி மேலகர் உரை
பரிமேலழகர் உரை: (அவள் முலைகளினாய வருத்தம் கூறியது.) மாதர் படா முலை மேல் துகில் - இம் மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில்; கடாஅக் களிற்றின்மேல் கட்படாம் - அவை கொல்லாமல் காத்தலின் கொல்வதாய மதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை ஒக்கும். (கண்ணை மறைத்தல் பற்றிக் 'கட்படாம்' என்றான். துகிலான் மறைத்தல் நாணுடை மகளிர்க்கு இயல்பாகலின், அத்துகிலூடே அவற்றின் வெம்மையும் பெருமையும் கண்டு இத்துணையாற்றலுடையன இனி எஞ்ஞான்றும் சாய்வில எனக் கருதிப் 'படாமுலை' என்றான். உவமை சிறிது மறையாவழி உவை கொல்லும் என்பது தோன்ற நின்றது.).
மணி குடவர் உரை
மணக்குடவர் உரை: மதயானை முகத்துக் கண்மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாமுலைமேல் இட்டதுகில்.
Kataaak Kalitrinmer Katpataam Maadhar
Pataaa Mulaimel Thukil
Couplet
As veil o'er angry eyes Of raging elephant that lies,The silken cincture's folds invest This maiden's panting breast
Translation
Vest on the buxom breast of her Looks like rutting tusker's eye-cover
Explanation
The cloth that covers the firm bosom of this maiden is (like) that which covers the eyes of a rutting elephant
Comments (5)

Vivaan Luthra
4 weeks ago
I find this poem very motivating. It pushes us to be more honest and kind in our actions.

Pihu Aurora
4 weeks ago
This verse speaks volumes. We need more reminders like this in today’s fast-paced world.

Nakul Bawa
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.

Azad Rau
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.
🌟 Kural of the Day
Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.
தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்.
Thannaiththaan Kaadhala Naayin Enaiththondrum
Thunnarka Theevinaip Paal
🧠 About Thiruvalluvar
Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).
Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.
Chirag Bassi
4 weeks ago
Absolutely love this one. It reminds me of the core values my grandparents taught me.