காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. | குறள் எண் - 1265

kaankaman-konkanaik-kannaarak-kantapin-neengumen-mendhol-pasappu-1265

63

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு.

"கண்ணார என் கணவனைக் காண்பேனாக; கண்டபிறகே என் மெல்லிய தோளில் படர்ந்துள்ள பசலை நிறம் நீங்கும்"

கலைஞர் உரை

"என் காதலரைக் கண்ணாரக் காண்பேனாக; கண்ட பிறகு என்னுடைய மெல்லிய தோளில் உண்டாகிய பசலை நிறம் தானே நீங்கி விடும்."

மு. வரதராசன் உரை

"என் கண்கள் முழுக்க என் கணவரை நான் காண்பேனாகுக; அவரைக் கண்டபின் என் மெல்லிய தோளின் வாடிய நிறம் தானாக நீங்கும்."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தலைமகன் வரவு கூற ஆற்றாயாய்ப் பசக்கற்பாலையல்லை என்ற தோழிக்குச சொல்லியது.) கண் ஆரக் கொண்கனைக் காண்க - என் கண்கள் ஆரும் வகை என் கொண்கனை யான் காண்பேனாக; கண்ட பின் என் மென்தோள் பசப்பு நீங்கும் - அங்ஙனம் கண்டபின் என் மெல்லிய தோள்களின்கண் பசப்புத் தானே நீங்கும். ('காண்க' என்பது ஈண்டு வேண்டிக் கோடற்பொருட்டு. அதுவேண்டும் என்பதுபட நின்றமையின் 'மன்' ஒழியிசைக்கண்வந்தது. 'கேட்ட துணையான் நீங்காது' என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: என்கண்கள் கொண்கனை நிறையக் காண்பனவாக; அவனைக் கண்டபின்பு எனது மெல்லிய தோளிலுண்டான பசலை நீங்கும். இது காண்டல் வேட்கையால் கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: எனது கண்களில் ஆவல் தீரும் வகையில் எனது கொண்களைக் காண்பேனாக; அங்ஙனம் கண்டபின் மெல்லிய தோளிலே உள்ள பசப்பு தானாகவே நீங்கும். "

வி முனுசாமி உரை

Kaankaman Konkanaik Kannaarak Kantapin
Neengumen Mendhol Pasappu

Couplet

O let me see my spouse again and sate these longing eyes!That instant from my wasted frame all pallor flies

Translation

Let me but gaze and gaze my spouse sallow on my soft shoulders files

Explanation

May I look on my lover till I am satisfied and thereafter will vanish the sallowness of my slender shoulders

63

Write Your Comment