நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். | குறள் எண் - 1216

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.
நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்.
"நனவு மட்டும் திடிரென வந்து கெடுக்காமல் இருந்தால், கனவில் சந்தித்த காதலர் பிரியாமலே இருக்க முடியுமே"
"நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்."
"கண்ணால் காண்பது என்றொரு கொடிய பாவி இல்லை என்றால் கனவிலே வந்து கூடிய என்னவர் என்னைப் பிரிய மாட்டார்."
"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். ('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.). "
"மணக்குடவர் உரை: நனவென்று சொல்லப்படுகின்ற ஒருபாவி இல்லையாயின் கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். "
"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின் கனவிலே வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார். "
Nanavena Ondrillai Aayin Kanavinaal
Kaadhalar Neengalar Man
Couplet
And if there were no waking hour, my loveIn dreams would never from my side remove
Translation
If wakeful hours come to nought My lov'r in dreams would nev'r depart
Explanation
Were there no such thing as wakefulness, my beloved (who visited me) in my dream would not depart from me
Write Your Comment