பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. | குறள் எண் - 1276

peridhaatrip-petpak-kalaththal-aridhaatri-anpinmai-soozhva-thutaiththu-1276

19

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து.

"ஆரத் தழுவி அளவற்ற அன்பு காட்டி அவர் என்னைக் கூடுவதானது மீண்டும் அவர் என்னைப் பிரிந்து செல்லப் போகிற குறிப்பை உணர்த்துவது போல் இருக்கிறதே"

கலைஞர் உரை

"பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல்கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்."

மு. வரதராசன் உரை

"அவரைப் பிரிந்து இருந்ததால் ஏற்பட்ட துன்பத்தினைப் பெரிதும் பொறுத்துக் கொண்டு இப்போது நான் மகிழும் வண்ணம் அவர் என்னைக் கூடுவது அவரது அன்பின்மையை எண்ணிப் பார்க்கச் செய்கிறது."

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து. (பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து. இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: நம் பிரிவினால் உண்டான துன்பத்தினைப் பொறுத்திருந்து பிறகு மகிழும் வண்ணம் கணவர் திரும்பிவந்து கலக்கின்ற கலவி மேலும் அத்துன்பத்தினைப் பொறுத்திருந்து அவரது அன்பில்லாத் தன்மையினை நினைக்கும் தன்மையுடையது. "

வி முனுசாமி உரை

Peridhaatrip Petpak Kalaththal Aridhaatri
Anpinmai Soozhva Thutaiththu

Couplet

While lovingly embracing me, his heart is only grieved:It makes me think that I again shall live of love bereaved

Translation

His over-kind close embrace sooths; But makes me feel, loveless, he parts

Explanation

The embrace that fills me with comfort and gladness is capable of enduring (my former) sorrow and meditating on his want of love

19

Write Your Comment