கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய் — பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. | குறள் எண் - 1246

Thirukkural Verse 1246

Thirukkural, authored by the Tamil poet-saint Thiruvalluvar, is a masterpiece of ethical living, comprising 1330 couplets divided into 133 chapters. It offers practical guidance on virtue (Aram), wealth (Porul), and love (Inbam)—values that transcend time, religion, and culture.

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்

பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு.

கலைஞர் உரை

நெஞ்சே! கூடிக் கலந்து ஊடலை நீக்கும் காதலரைக் கண்டால் ஒரு தடவைகூடப் பிணங்கியறியாத நீ இப்போது அவர் மீது கொள்ளுகிற கோபம் பொய்யானது தானே?

மு. வரதராசன் உரை

என் நெஞ்சே! ஊடியபோது கூடி ஊடல் உணர்த்த வல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணர மாட்டாய்; பொய்யான சினங்கொண்டு காய்கினறாய்.

சாலமன் பாப்பையா உரை

என் நெஞ்சே! நான் அவருடன் ஊடினால் அந்த ஊடலை என்னுடன் கூடி நீக்கவல்ல என் அன்பரைக் கண்டால் பொய்யாகவாவது கொஞ்சம் ஊடிப் பிறகு ஊடலை விட்டுக் கூடமாட்டோம். இப்போது அதையும் விட்டுவிட்டு அவரைக் கொடியவர் எனப் பொய்யாக வெறுப்பது போல் இருக்கின்றாய்; இதை விடுத்து அவரிடம் போயேன்.

பாரி மேலகர் உரை

பரிமேலழகர் உரை: (தலைமகன் கொடுமை நினைந்து செலவு உடன்படாத நெஞ்சினைக் கழறியது.) என் நெஞ்சே, கலந்து உணர்த்தும் காதலர்க்கணடால் புலந்து உணராய் - யான் தம்மொடு புலந்தால் அப்புலவியைக் கலவிதன்னானே நீக்கவல்ல காதலரைக் கண்டால் பொய்யேயாயினும் ஒருகால் புலந்து பின்னதனை நீக்க மாட்டாய்; பொய்க்காய்வு காய்தி - அதுவும் மாட்டாத நீ, இப்பொழுது அவர் கொடியர் எனப் பொய்க் காய்வு காயாநின்றாய், இனி இதனை ஒழிந்து அவர்பாற் செல்லத் துணிவாயாக. ('கலத்தலான்' என்னும் பொருட்டாய்க் 'கலக்க' என்பது திரிந்து நின்றது. அதனான் உணர்த்தலாவது கலவியின்பத்தைக் காட்டி , அதனான் மயக்கிப் புலவிக் குறிப்பினை ஒழித்தல். பொய்க்காய்வு - நிலையில் வெறுப்பு. 'கண்டால் மாட்டாத நீ காணாதவழி வெறுக்கின்றதனால் பயனில்லை' என்பதாம்.).

மணி குடவர் உரை

மணக்குடவர் உரை: என்நெஞ்சே! நீ காதலர் கொடுமையை அவர்க்கு உட்பட்டு அறிந்து வைத்தும் அவரைக்கண்டால் புலந்து கலக்கமாட்டாது முன்பே கலப்பை: இப்பொழுது பொய்க்காய்வு காயாநின்றாய்.

வி முனுசாமி உரை

திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என் நெஞ்சமே! நாம் பிணங்கிக் கொண்டு புலந்திருந்தால் கலவியினாலே நீக்க வல்ல காதலரைக் கண்டால் பொய்யாகவேனும் புலந்து பின் நீங்காத நீ இப்போது பொய்யாகக் கோபித்துக் கொண்டிருக்கின்றாய்.

Kalandhunarththum Kaadhalark Kantaar Pulandhunaraai

Poikkaaivu Kaaidhien Nenju

Couplet

My heart, false is the fire that burns; thou canst not wrath maintain,If thou thy love behold, embracing, soothing all thy pain

Translation

Wrath is false, O heart, face-to face Sans huff, you rush to his sweet embrace

Explanation

O my soul! when you see the dear one who remove dislike by intercourse, you are displeased and continue to be so Nay, your displeasure is (simply) false

Comments (1)

Jivin Dugal
Jivin Dugal
jivin dugal verified

1 month ago

Really appreciate the wisdom here. Makes me want to follow this guidance in daily life.

🌟 Kural of the Day

Discover daily wisdom from the timeless Thirukkural. Each day, we highlight one profound couplet that offers insights into life, virtue, and values—guiding you with ancient truth in modern times.

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்

நோனா உடம்பின் அகத்து.

Kaamamum Naanum Uyirkaavaath Thoongumen

Nonaa Utampin Akaththu

🧠 About Thiruvalluvar

Thiruvalluvar is one of the greatest Tamil poets and philosophers known for composing the Thirukkural —a classic Tamil text consisting of 1,330 couplets covering ethics ( aram ), governance ( porul ), and love ( inbam ).

Though little is known about his personal life, his work has transcended time, offering practical wisdom and moral values that remain deeply relevant. Thiruvalluvar's verses have been translated into many lngs, making him a universal figure of wisdom and virtue.