உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. | குறள் எண் - 1249

ullaththaar-kaadha-lavaraal-ullinee-yaaruzhaich-cheriyen-nenju-1249

81

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு.

"உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?"

கலைஞர் உரை

"என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?"

மு. வரதராசன் உரை

"என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) என் நெஞ்சு - என் நெஞ்சே; காதலவர் உள்ளத்தாராக - காதலர் நின்னகத்தாராக; நீ உள்ளி யாருழைச் சேறி - முன்பெல்லாம் கண்டு வைத்து இப்பொழுது நீ புறத்துத் தேடிச் செல்கின்றது யாரிடத்து? ('உள்ளம்' என்புழி 'அம்' பகுதிப் பொருள் விகுதி. 'நின்னகத்திருக்கின்றவரை அஃது அறியாது புறத்துத் தேடிச் சேறல் நகை. "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: என்னெஞ்சே! நின்னாற் காதலிக்கப்பட்டவர் நினது உள்ளத்திலே யிருப்பாராக, நீ நினைத்து யாவர்மாட்டுச் செல்கின்றாய். இது தலைமகள் வாராதேபோனால் இங்கே காணலாமென்று கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: என் நெஞ்சமே! காதலர் உள்ளத்திலேயே இருக்கின்றார். இப்போது வெளியில் போய்த் தேடி யாரிடம் செல்கின்றாய்?. "

வி முனுசாமி உரை

Ullaththaar Kaadha Lavaraal Ullinee
Yaaruzhaich Cheriyen Nenju

Couplet

My heart! my lover lives within my mind;Roaming, whom dost thou think to find

Translation

The lover lives in Self you know; Whom you think, mind to whom you go?

Explanation

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?

81

Write Your Comment