மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். | குறள் எண் - 1207

marappin-evanaavan-markol-marappariyen-ullinum-ullam-sutum-1207

58

திருக்குறள் என்பது உலகப்புகழ் பெற்ற தமிழ் இலக்கியமாகும். திருக்குறளின் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு அடிகளில் மக்களுக்கு தேவையான அனைத்து நெறிகளையும் திருவள்ளுவர் இயற்றி உள்ளார்.இன்று நாம் பார்க்கப் போகும் குறள்.

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்.

"மறதி என்பதே இல்லாமல் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே பிரிவுத்துன்பம் சுட்டுப் பொசுக்குகிறதே! பினைக்காமல் மறந்துவிட்டால் என்ன ஆகுமோ?"

கலைஞர் உரை

"( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே! நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ?"

மு. வரதராசன் உரை

"அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது எப்படி?"

சாலமன் பாப்பையா உரை

"பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) மறப்பு அறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் - அவ்வின்பத்தை மறத்தலறியேனாய் இன்று உள்ளாநிற்கவும் பிரிவு என் உள்ளத்தைச் சுடாநின்றது; மறப்பின் எவனாவன் - அங்ஙனம் பிரிவாற்றாத யான் மறந்தால் இறந்து படாது உளேனாவது எத்தால்? (மறக்கப்படுவது அதிகாரத்தான் வந்தது. 'மன்' ஈண்டும் அதுபட நின்று ஒழியிசையாயிற்று. கொல்: அசைநிலை.). "

பாரி மேலகர் உரை

"மணக்குடவர் உரை: அவரை மறந்தால் என்னாவன் கொல்லோ: மறப்பறியேனாய் நினைக்கவும் இக்காமம் நெஞ்சத்தைச் சுடாநின்றது. இது சீரியன உள்ளிப் பூரியன மறத்தல் வேண்டுமென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. "

மணி குடவர் உரை

"திருக்குறளார் வீ. முனிசாமி உரை: முன்பு நுகர்ந்த இன்பத்தினை மறக்காமல் நினைத்துக் கொண்டிருந்தாலும் பிரிவுத் துன்பம் எனது உள்ளத்தினைச் சுட்டு விடுகின்றது; அவ்வாறு இருக்க, அதனை மறந்தால் எவ்வாறு உயிர்வாழ்வேன்?. "

வி முனுசாமி உரை

Marappin Evanaavan Markol Marappariyen
Ullinum Ullam Sutum

Couplet

If I remembered not what were I then? And yet,The fiery smart of what my spirit knows not to forget

Translation

What will happen if I forget When his memory burns my heart?

Explanation

I have never forgotten (the pleasure); even to think of it burns my soul; could I live, if I should ever forget it ?

58

Write Your Comment